ஏழு நாட்கள் ஏழு நிறங்கள்: அதிர்ஷ்டம் தரும் ஆடைகள்!

வாரத்தின் ஏழு நாட்களும் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய ஏழு கிரகங்களால் ஆளப்படுவதாக வான் ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.

ஒவ்வொரு கிழமைக்கும் அந்தந்த கோள்களுக்கான பிரத்யேக நிறங்களில் ஆடை அணிவது, நல்லவை நடக்கச் செய்யும் என்பது நம்பிக்கை. ஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட நிறமானது,அவர்களின் பிறந்த தேதியைப் பொறுத்து மாறும் என்றாலும், ஏழு நாட்களுக்கும் உரிய இந்த ஏழு நிறங்களும் அனைவரும் அணிவதற்கு ஏற்றது.

வாரத்தின் முதல் நாளான ஞாயிறு, கோள்களின் நடுவில் வீற்றிருக்கும் நாயகனான சூரியனுக்குரியது. சூரியதேவனின் அருள் பெற சிவப்பு நிறத்துடன், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமும் அணியலாம்.

சந்திரனுக்கு உரிய நாள், திங்கள். வெண்மை மற்றும் சில்வர் நிறங்களில் ஆடை அணிந்தால் அவர் ஆசி கிடைக்கும். மேலும், இது சிவனுக்கு உரிய நாளாகவும் விளங்குகிறது என்பதால், ஊதா நிறமும் சுபம் தரும்.

செவ்வாய் கிரகத்திற்கு உரிய நிறங்களான சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தில் செவ்வாய்க் கிழமைகளில் ஆடைகள் அணியலாம். மேலும், ஆரஞ்சு நிறத்திலும் அணியலாம்.

‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். அந்தளவுக்கு ராசியான கிழமை இது. பகவான் புதனுக் குரிய இந்தக் கிழமையில், பச்சை ஆடை உடுத்தி அவரின் அனுக்ரஹம் பெறலாம்

 

வியாழன், குருவுக்குரிய நாள். மஞ்சள் ஆடை உடுத்தி குருவையும், இந்நாளின் தெய்வமான லஷ்மியையும் வழிபட, மங்களம் பெருகும்.

சுக்ரனின் ஆதிக்கக் கிழமை, வெள்ளி. கடல் நீல நிறத்திலும், வெண்மை நிறத்திலும் ஆடையுடுத்தி, குரு வையும், லஷ்மியையும் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளைப் பூக்களால் வழிபட்டால் ஞானமும், செல்வமும் வளரும்.

சனிபகவானுக்குரிய கிழமை, சனி. இந்தக் கிழமைகளில் அவரின் இஷ்ட நிறமான கருப்பு நிறத்தில் ஆடை கள் உடுத்தி, அவர் தரும் கஷ்டங்களில் இருந்து விடுதலை பெற்று, வளம் பெறலாம்.

சுருக்கமாக,

ஞாயிறு    :  சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு
   திங்கள்    :  வெண்மை, சில்வர், ஊதா
செவ்வாய் :  சிவப்பு, பிங்க், ஆரஞ்சு
  புதன்   :  பச்சை
வியாழன்  :  மஞ்சள்
வெள்ளி   : கடல் நீலம், வெண்மை
சனி    : கருப்பு

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

fritter_sqw@mailxu.com