நவகிரக தோஷம் நீக்கும் பரிகாரம்

நவகிரக தோஷம் நீக்கும் பரிகாரம்

நம்மில் பலர் பல ஜோதிடர்களை நாடிச் சென்று நம் ஜாதகத்தினை கட்டி பரிகாரம் கேட்டும் செய்தும், பல கோவில்களுக்கு சென்று பல பூஜைகளை செய்தும், நவரத்தின கற்களை அணிந்தும், பல எந்திரங்கள் மந்திரங்கள் செய்தும் வாழ்வில் ஒரு கடுகளவு கூட முனேற்றம் உண்டாகவில்லை என்பதை சொல்ல கேட்டிருக்கிறோம். பலரோ பிறந்த ஜாதகமே தெரியாமல் என்ன பரிகாரங்களை செய்வது என தெரியாமல் அடுக்கடுக்கான கஷ்டங்களையே வாழ்வில் அடைந்து வருவதினை காண்கிறோம். அப்படி தொடர்ந்து துன்பங்களை அடைந்து வருபவர்கள் அந்த துன்பங்கள் மாறி இன்பமான சந்தோஷமான ஒரு வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்று ஏங்கி தவிப்பவர்களா நீங்கள் கவலையை விடுங்கள் உங்கள் வாழ்வும் மலர சர்வ சக்தி விருட்ச பீட ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் சொல்லும் எளிய பரிகார முறைகள் இதோ

1. யார் அதிகாலையில் பிரம்ம முகூர்த்ததில் ( 4.30 மணி முதல் 6 மணி வரை ) குளித்து வீட்டில் விளக்கேற்றி தீப ஜோதி தரிசனத்தை பார்த்து வருகிறானோ அவனுடைய பாவங்கள் விரைவில் நீங்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

2. யார் தினமும் பசுவுக்கு அகத்தி கீரையை உணவாக கொடுத்து வாருகிறார்களோ அவர்களுடைய பாவங்களும் விரைவில் நீங்கும். பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அடக்கம்.

3. யாரொருவர் தொடர்ந்து அன்ன தானம் செய்து வருகிறார்களோ அவர்களின் பாவங்களும் விரைவில் தீரும்.

4. நீங்கள் எத்துனை பெரிய தனவந்தராக இருந்தாலும் இறைவன் அதனை பெரிதாக எண்ணுவதில்லை, மாறாக நீங்கள் இறைவனுக்காக என்ன உடல் உழைப்பை செய்தீர்கள் என்றே இறைவன் பார்க்கிறார். இறை ஸ்தலங்களில் நீங்கள் உடல் உழைப்பால் செய்யும் பணிகளால் உங்கள் பாவங்கள் விரைவில் நீங்கும்.

5. நீங்கள் பிறந்த நட்சத்திர நாளன்று உங்களுக்கு உண்டான நட்சத்திர விருட்சத்திற்கு முன் விளக்கேற்றி நட்சத்திர காயத்திரி மந்திரம், அதி தேவதை பிரத்யதி தேவதை மந்திரம் சொல்லி வணங்கி விருட்சத்தினை சுற்றி வந்து வழிபட்டு, பின் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்களையும் வலம் வந்து வழிபட சகல தோஷங்களும் நீங்கும். சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

6. நவ தானியங்களை பரிகாரம் செய்யும் நாளுக்கு முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து பரிகாரம் செய்யும் நாள் நவ தானியம் ஊறவைத்த தண்ணீரை விருட்சங்களுக்கு ஊற்றி, ஊறவைத்த நவதானியதுடன் வெல்லம் சேர்த்து ஆட்டி அதனை பசு மாட்டிற்கு உண்ண கொடுத்து பசு உண்ணும் போது பசுவை 9 முறை வலம் வந்து வணங்க தோஷங்கள் நீங்கும்.

7. ஆலய திருப்பணிகளில் நம்மால் இயன்ற பொருள் உதவிகளை செய்து வர எல்லா வகையான பாவங்களும் நீங்கும்.

மேற்கண்ட பரிகாரங்களை தொடர்ந்து செய்துவர நம்மை வாட்டும் துன்பங்கள் நீங்கி வாழ்வில் புது வசந்தம் உண்டாகும், இன்பம் பெருகும், நல்லவைகள் நடக்கும், தொழில் வளமும் செல்வ வளமும் பெருகும். வாழ்க வளமுடன் !

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

merdian.344@mailxu.com moon@mailxu.com