நவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள்

சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.
சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்திரம் முத்துமாலை வெள்ளரலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.
அங்காரக பகவானுக்குச் செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்துச் சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுத்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.

புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். உடனடியாக புதக்கிரகதோஷம் நீங்கும்.

குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.

சுக்கிர பகவானுக்கு வெள்ளிக் கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.

சனிபகவானுக்குச் சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.

ராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.

கேது பகவானுக்கு ஏதாவதொருகிழமையில் அபிஷேகம் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பனவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

odenheimer-sqw@mailxu.com sniffen.leilani@mailxu.com