நவகிரகங்கள் – ஓர் அறிமுகம் – 2

5. குரு

பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே குருவின் பெருமையை விளக்கப் போதுமானது. தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும். அந்தணர், பசுக்களுக்கு அதிபதி. குரு மஞ்சள் நிறத்தோன். சாத்வீகன். உடலில் சதை இவர். புத்திர காரகன், தன காரகன் இவரே. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியமஒருவர் நல்லவரா ?கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம்.ஆலங்குடி, கும்பகோணத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருஸ்தலம். தக்ஷிணாமூர்த்தி மூலவராகக் கொண்ட இத்தலத்தில் ஆங்கிலத்தில் JUPITER என்று அழைக்கப்படும் குரு(வியாழன்) என்னும் இக்கிரகம் கற்றுளியால்வ சுற்றில்புடைப்பு சிற்பமாகக் செதுக்கப்பட்டு காணப்படுவது சிறப்பு அம்சமாகும். குருபெயர்ச்சி எனப்படும் காலகட்டத்தில் இந்த தலத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் பக்தகோடிகள். பார்வதி தேவியானவள் இங்குள்ள அமிர்தபுஷ்கரணி கரையில் பிறந்து, பின், சிவனுடன் இணைந்ததாக ஐதீகம். நோய் நொடிகளில் இருந்து நிவாரணம் கொடுப்பதும், பூர்வ புண்ணிய பாவங்களில் இருந்து நலம் தருவதும், நீண்ட ஆயுள், வலிமை, ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், நல்ல கல்வி வழங்குவதும் இக்குரு கிரகத்தின் ஆதிக்கமாகும். ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பது

6. சுக்கிரன்

அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே. ஜோதிடப்படி களத்திரகாரகள் சுக்கிரன். இவனே வாகனங்களுக்கும் அதிபதி. ஜனன உறுப்புகளைக் காப்பவன் இவனே. சிற்றின்பத்தை நுகர வைப்பவனும் இவனே. உடலில் வீர்யம் இவன். அணிமணி, ஆபரணம் சுக்கிரன் அருள் இருந்தாலே சேரும்.கிழக்குத் திசை சுக்ரனுக்கு உரிய திசை. இந்திராணி இவருக்கு அதி தேவதை. இந்திர மருத்துவன் பிரத்யதி தேவதை. வைரம் சுக்ரனுக்கு உகந்த ரத்தினம். கருடனே சுக்கிரனின் வாகனம்கோவில் நகரமான கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கஞ்சனூர், ஆங்கிலத்தில் VEENUS என்றும் தமிழில் சுக்கிரன்(வெள்ளி) என்றும் அழைக்கப்படும் கிரகம் தொடர்புடைய மதுரை ஆதீனத்தால் நிர்வகிக்கப் படுகின்ற ஒரு சிவஸ்தலமாகும். இத்தலம்திருவாடுதுறை என்னும் அமைதியான கிராம சூழ்நிலையில் அமைந்துள்ளது. இத்தலம்அக்னிஸ்தலம் என்றும், பிரம்மபுரி என்றும், பலாசவனம் என்றும் அழைக்கப் படுகிறது. சிவ பார்வதி திருமண கோலத்தை பிரம்மன் இங்கு கண்டதாக ஐதீகம். தங்களின் துனைவிமார்களின் நலம் நாடி பக்தர்கள் இங்கு வருகின்றனர். சுக்ரா அல்லது வீனஸ் என்னும் இந்த கிரகம் நல்ல கல்வி அறிவுடன், வளமான சுகமான வாழ்க்கையையும், வம்சாவழியையும், நீண்ட ஆயுளையும், செல்வ சம்பத்துக்களையும் வழங்கக்கூடியவர் ஆவார். இக்கிரகத்தின் அதி தேவதை மகாலட்சுமி ஆவார். .

7. சனி

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவனைத் துதித்து வழிபட்டால் நலம் பெறலாம். எண்ணெய், கறுப்பு தானியங்களுக்கு சனியே அதிபதி. கருமை இவனுக்கு உகந்த நிறம்.இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவன். தாமச குணத்தோன். ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவன். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவான். மேற்குத்திசை சனிக்கு உரியது. திருநள்ளாறு சனிக்கு உரிய தலம். சனிக்கு அதி தேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. நீலம் இவருக்கு உகந்த ரத்தினம். காகமே சனியின் வாகனம்திருநள்ளார், கோவில்களின் சொர்க்க பூமியான கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் SATURN என்றும் தமிழில் சனீஸ்வரன் என்றும் அழைக்கப்படும், இக்கிரகத்திற்கு அமைந்துள்ள ஒரே கோவிலாகும் இத்தலம். தனது வான வெளி சஞ்சாரத்தின் பொழுது, இத்தளத்தின் மீது தனது அனைத்து ஆதிக்கத்தையும் கொண்டுள்ள, இந்த சனி கிரகத்தை, புராணக் கதைகளில் புகழ்பெற்ற நலமஹாராஜா இங்குள்ள நளதீர்த்தம் என்னும் குளத்தில் குளித்து, ஆராதித்து, தனது பெரும்துன்பங்களில் இருந்து விடுதலை அடைந்ததை அக்காவியம் குறிப்பிடுகிறது. இத்தளத்தில் உள்ள நளதீர்த்தம் என்னும் குளத்தில் குளித்து, சனி பகவானை ஆராதித்தால், சனி கிரகத்தால் ஏற்படும் எல்லா வித துரதிருஷ்டங்களும், துன்பங்களும் கழுவப்பட்டு, நிவர்த்தி பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகின்றது. இந்த சனி கிரகம் ஒருவரின் ஜாதகத்தில், ஜனன காலத்திலும், சஞ்சார காலத்திலும் தனது இருப்பிடம் முகாந்திரமாக அந்த ஜாதகருக்கு துன்பங்களும், தொல்லைகளும், துயரங்களும் கொடுப்பவர் எனவும், அதேபோல் ஈடாக இவரை மனப்பூர்வமாக ஆராதிக்கும் பக்தர்களுக்கு நலம் பயக்கும் நல்லவராகவும் இருப்பார் என்றும் ஜோதிட குறிப்புக்கள் கூறுகின்றன. இந்த சனி கிரகத்தின் அதி தேவதை யமதர்மா ஆகும். NASA விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளையும் அதிசயிக்க வைக்கும் தகவல்களும் உண்டு. இத்தளத்தை கடக்கும் விண்வெளி கலங்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் வரையிலும் எந்த ஒரு சமிக்கையும் வழங்காமல் இருந்ததைக் கண்ட விஞ்ஞானிகள் அவ்விடம் இதுவென கண்டு பல ஆராய்ச்சிகளின் மத்தியில் ஒன்றும் அறியாமல் அதிசயப்பட்டுப் போனார்கள். இதனைப் பற்றிய குறிப்புக்களை தங்களின் பதிவேடுகளில் பதிவும் செய்துள்ளார்கள். .

8. ராகு

சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தான். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தான். பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் இயற்றி கிரக நிலையை அடைந்தான். அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன், சூதாட்டம் என்ற இவற்றிற்கெல்லாம் அதிபதி ராகுவே. மிலேச்சருக்கு அதிபதி. கலப்பு இனத்திற்கு வழி வகுப்பவன். வெளிநாட்டுக் கலப்புக்கு அதிபதி.தென்மேற்கு திசைக்கு அதிபதி ராகு. திருநாகேஸ்வரம் ராகுவிற்கு உரிய தலம். பசு ராகுவின் அதி தேவதை, பாம்பு பிரத்யதி தேவதை. கோமேதகம் ராகுவிற்கு உரிய ரத்தினம்திருநாகேஸ்வரம், ராகு கிரகத்தின் புனித, பெரிய கோவில் கோவில்களின் புனித நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புராண வரலாற்றில் இந்த ராகு பகவானின் இத்தலத்தில், ஆதிசேஷன், தக்ஷன் மற்றும் கார்கோடன் போன்ற நாகங்கள் சிவபெருமானை வழிபட்டுள்ளன என்றும், நலமஹாராஜா என்னும் மன்னனும் சிவனை இத்தலத்தில், திருனள்ளாரைப் போல வழிப்பட்டதாகவும் கூறப் படுகிறது. இந்த ராகுவேஒருவரின் ஆற்றலை வலிமை படுத்தவும் எதிரியை நண்பனாக மாற்றவும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளார். இந்த ராகுவின் அதிதேவதை துர்காதேவி ஆகும். மூலநாதரின் பெயர் நாகேஸ்வரர் மற்றும் தேவியின் பெயர் கிரிகுஜாம்பிகை ஆவார். இத்தேவியை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார். இத்தலத்தில் ராகு தனது தேவியுடன் எழுதருளுகின்றார். ராகு காலத்தில் அபிஷேகம் செய்யப்படும் பாலானது அதிசயக்க விதத்தில் நீலநிறமாக தோன்றுகின்றது. பொதுவாக ராகு தோஷமுள்ளவர்கள், இங்கு வந்து ராகு காலத்தில் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு தங்களின் தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர். .

9. கேது

ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவன் கேது. மோட்ச காரகனும் இவனே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றான்.விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவன். நீச பாஷைகளில் தேர்ச்சியைத் தருவான். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். கீழ்ப்பெரும்பள்ளம் கேதுவிற்கு உரிய தலம்.சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை, பிரம்மன் பிரத்யதி தேவதை. வடமேற்கு கேதுவிற்கு உரிய திசை. வைடூர்யம் கேதுவிற்கு உகந்த ரத்தினம்கீழ்பெரும்பள்ளம், கும்பகோணத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புராதன, வரலாறு கொண்ட சிவஸ்தலம் ஆகும். கேது என்னும் கிரகம் இக்கோவிலில் சிவனை வழிபாடு செய்து அமைந்துள்ளார். ராகுவும் கேதுவும் பாற்கடலில் கிடைத்த அமுதத்துடன் தொடர்புகொண்டு, சாபத்திற்கு ஆளாகி, சிவனை வழிபாட்டு, கிரக அந்தஸ்த்தையும், மனித தலையும் பாம்பின் உடலையும், பாம்பின் தலையையும் மனித உடலையும் பெற்று, இத்துன்பங்களுக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழி கொள்ளும் நோக்கத்துடன் கிரக சஞ்சாரம் செய்வதாக ஜோதிடக் குறிப்புக்கள் கூறுகின்றன. அதன் பலனாகவே சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வதாகவும் கூறப் படுகின்றன. இத்தலத்தில் கேதுவுக்கு தனிக் கோவில் உண்டு. கேது என்னும் இக்கிரகம் தனது பக்தர்களுக்கு வளமான வாழ்க்கையையும், நல்ல ஆரோக்கியத்தையும், செல்வ சம்பத்துக்களையும், கால்நடை போன்றவைகளையும் பொதுவாக அனைத்து நலன்களும் அளிப்பவர் என்று கூறப் படுகிறது. இக்கேதுவுக்கு அதி தேவதைகள் கணேசர் எனப்படும் விநாயகக் கடவுளும், இந்திரனும் ஆவார்கள்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

royalsvernell