வாழ்வில் வளம் பெற நவக்கிரக தீப வழிபாடு
|* சூரியனார் கோவிலில் 11 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், நோய்கள் விலகி ஓடும்.
* திங்களூரில் 10 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் கவலைகள் அகலும்.
* வைத்தீஸ்வரன் கோவிலில் 9 தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.
* கல்வியில் சிறப்புற்று விளங்க, திருவெண்காட்டில் 9 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
* நாக தோஷம் நீங்க, ஆலங்குடியில் 28 தீபங்கள் ஏற்றி வழிபடுவது நல்லது.
* திட்டை குரு தலத்தில் 33 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால், புத்திர பாக்கியம் கிட்டும்.
* திருநள்ளாறு தலத்தில் 9 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் ஆயுள் பெருகும்.
* திருநாகேஸ்வரத்தில் 21 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் வாக்கு வன்மை உண்டாகும்.
* கீழப்பெரும்பள்ளத்தில் 9 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.
* கஞ்சனூரில் 11 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் நல்ல மனைவி அமைவாள்.